Friday, 9 September 2011

F1 - தகவல்கள்

எழுத்தாளர்: வணக்கம் தமிழ்
09:09:11

இந்த பார்முலா 1 ன்னு ரொம்ப நாளா நாம கேள்விப்படுகின்ற ஒரு விசயத்த பத்தின சில தகவல்களை இங்கு உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்,



முதலில், பார்முலா 1 ஓட்டுகின்ற போது வீரர்களின் உடம்பு அதிக அளவு சூட்டை உற்பத்தி செய்வதுடன், அதிக G FORCE  க்கு ஒரு மணி நேரத்திற்கு அதிகமான காலம் உள்ளாக்கபடுகிறது, இதன் காரணமாக சராசரியாக ஒரு வீரர் 4 kg எடை வரை ஒரு பந்தயத்திலேயே இழக்கிறார், ஆனால் இந்த எடையை திரும்பவும் பெற்று விடுகின்றனர் பந்தயத்திற்கு பிறகு. 

தொடர்ச்சியாக 15 G force ஒரு நிமிடத்திற்கு  தாக்கும்பொழுது மனித உடல் மரணத்தை கூட தழுவும் சூழல் எழலாம்.

F1 காரின் ஸ்டீரிங் wheel கழற்றிய பின்பே காரின் உள்ளே நுழைய முடியும்.

உடல் வறண்ட நிலையை தடுப்பதற்காக மிக அதிக அளவில் தண்ணீரை குடித்துவிட்டுத்தான் காரில் அமரவேண்டும்.

காரின் உள்ளே உண்டாக கூடிய வெப்பமானது அவர்களின் எடையளவுக்கு வியர்வையை சுரப்பதுமல்லாமல் 2 அல்லது 3 லிட்டர் அளவு தண்ணீரை இழக்குமாம்.

4 சதவீத உடல் இலக்கு போது சாதாரண மனிதன் 40 சதவீத pscho-physical  திறமையை இழக்க நேரிடுமாம்.



வெயில் நேர பந்தயங்களின்  பொழுது ஒவ்வொரு வீரரும் 8 லிட்டர் தண்ணீர் கூட குடிக்கமுடியுமாம், அதற்க்காகவே F1 cock pitல் தண்ணீர் பாட்டில்கள் பொறுத்த பட்டிருக்குமாம், மேலும் அதில் தாது உப்புகள் கலக்கப்பட்டு அவை குழாய்கள் மூலம் செலுத்தப்படுமாம்.

பெரும்பாலான F1 வீரர்கள் அவர்களது ஓட்டும் தொழிலை karting ல் இருந்துதான் தொடங்குகிறார்களாம், அவர்கள் வரும் வழியானது முதலில், FormulaFord, Formula Remnault, Formula 3, formula 2 கடைசியில் GP2, அப்புறம் Formula3000 மூலம் F1 க்குள் நுழைய வேண்டுமாம்.  

No comments:

Post a Comment