Friday, 2 September 2011

அலங்காரத்துக்கு மட்டுமே காதுகள்

அலங்காரத்துக்கு மட்டுமே காதுகள்




நான் சொல்வதை தமிழர்கள் கேட்கவில்லை: கருணாநிதி
லைவர் அவர்கள் சொல்வதை தமிழர்கள் காது கொடுத்து கேட்டிருந்தால் அன்பே வடிவான அட்டாக் பாண்டியனும் பொறுமைக்கு பெருமை சேர்க்கும் பொட்டு சுரேசும் சிறையில் வாட வேண்டிய நிலை வந்திருக்குமா? அதிகாலை வேளையில் சூரியனை தரிசிக்க வேண்டிய நேரு காவலர்களின் கர்ண கடூற முகத்தை காண வேண்டிய சூழல் வந்திருக்குமா? வீரத்தின் விளை நிலமான வீரப்பாண்டி ஆறுமுகம் கூட சிறை கம்பிகளை எண்ண வேண்டிய துர்பாக்கிய நிலை நேரிட்டுயிருக்குமா? அஞ்சா நெஞ்சன் அழகிரி மதுரையில் கால் பதிக்கவே நடு நடுங்கி குழந்தை குட்டிகளை அயல்நாடுகளில் குடியேற்றி விட்டு டெல்லியிலே தவமிருக்கும் பரிதாபம் சம்பவித்திருக்குமா? எல்லாம் காது கேளாத தமிழர்களால் வந்த வினை.
 
ழலுக்கு துணை போனதில்லை : பிரதமர்

ம்ம பிரதமர் ரொம்ப பரிசுத்தம் அவர் நேரடியாக ஊழலுக்கெல்லாம் துணை போகமாட்டார் ராசா,தயாநிதிமாறன்,கனிமொழிபோன்றோர்களின் செயல்களுக்கு ஊக்கம் கொடுப்பார் சுரேஷ் கல்மாடி விளையாட்டு துறையில் காட்டிய செயல் துடிப்புக்கு ஆக்கம் கொடுப்பார் ஷீலா தீட்சித் போன்றோர்கள் நாட்டுக்கு நல்லப்பணி செய்தால் துணை போவார் இன்னும் சொல்லப் போனால் சோனியா காந்தியின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பட்டுக் கம்பளம் விரிப்பார் அவர் மேஜையிலிருக்கும் பேனாவை யாராவது திருட வந்தால் கூட அய்யய்யோ திருட்டை கண்ணால் பார்ப்பது பாவமென்று கண்களை மூடி கொள்வாரே தவிர வாய் திறந்து முனுமுனுக்கக் கூட மாட்டார் அப்படிப் பட்ட உத்தமர் நமது பிரதமர் இவராவது ஊழலுக்கு துணை போவதாவது

 
லோக்பால் மட்டுமே ஊழலை ஒழிக்காது: ராகுல்
 
ராகுல் பெரிய விஞ்ஞானி யாருமே கண்டுபிடிக்காத கண்டு பிடிக்க முடியாத எவ்வளவு பெரிய விஷயமானாலும் துருவி துருவி கண்டுபிடித்து விடுவார் லோக்பால் மசோதா கொண்டுவந்தால் போதுமா? ஊழல் ஒழிந்து விடுமா? அந்த சட்டத்தை நடைமுறை படுத்துவது நாங்கள் தானே? எங்களால் நாடு நன்மை அடைய விட்டு விடுவோமா? இந்த அன்னா ஹசாரேக்கு விவரம் போத வில்லை இவர் விவரம் தெரிந்தவாராக இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சி ஐந்து பொது தேர்தல்களில் பங்கு பெற கூடாது என்று தானே உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும்! அவர் அப்படி செய்யாததை மறைமுகமாக சுட்டிக் காட்டி ராகுல் பேசுவது அவர் விஞ்ஞானி என்பதற்கு தக்க சான்று

ந்திய எல்லையில் நவீன ஏவுகணைகளை குவிக்கும் சீனா

லோ! பிரதமர் சார்!! அபாயம்! சீனாக்காரன் ஆயுதம் கொண்டுவரான் நாம உஷாரா இருக்கணும் ஹலோ...! நான் சொல்றது காதுல விழுதா... கொஞ்சம் கவனிச்சு கேளுங்க... அட! எங்க பார்க்றீங்க! உங்களத்தான் கூப்பிடுகிறேன் காதுல விழலியா? சீனாக்காரன், அட இன்னும் சத்தமா சொல்லட்டுமா சீனாக்காரன் ஆயுதம் கொண்டுவறான்... இப்போவும் காது கேட்கலையா மைக் வச்சி கத்தினாலாவது கேட்குமா? அட இருந்தும் கேட்காத இந்த காதுகளை அலங்காரத்துக்காக ஏன் சார் வச்சிருக்கிங்க! கழற்றி போடுங்க குறுமி சேருவதாவது குறையும்.

No comments:

Post a Comment