Saturday, 3 September 2011

பிரஷாந்த் பூஷனுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்!

 தனக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்த பிரஷாஷ் பூஷன், "பொது மக்களின் நலன் சார்ந்த விவகாரத்தில் உண்மையைப் பேசுவது உரிமை மீறல் ஆகாது," என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து பிரஷாந்த் பூஷன் கூறிய கருத்துகளுக்காக இந்த உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்குத் தகுந்த விளக்கத்தை அவர் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால், நாடாளுமன்றம் கொண்டு வரும் உரிமை மீறல் பிரச்னைகள் குறித்து மக்களுக்கு சந்தேகம் எழும் என்று அவர் குறிப்பிட்டார்.

கிரண் பேடி சாடல்...

முன்னதாக, அண்ணா ஹஜரே குழுவைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி நேற்று உரிமை மீறல் நோட்டீஸைப் பெற்றுக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகமூடிகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டுள்ளனர் என்று விமர்சித்ததற்காக அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அவை உரிமை மீறல் குறித்து அறிந்த பின்னர், "நான் தெரிவித்த கருத்துக்களில் எவ்வித தவறும் இல்லை. அதற்காக மன்னிப்பு கேட்கப் போவதில்லை. எந்தத் தண்டனையையும் ஏற்கத் தயார்," என்று கிரண் பேடி கூறினார்.

கிரண் பேடி, பிரஷாந்த் பூஷன் இருவர் மீதும் அவதூறு குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால், 15 நாள் சிறைத்தண்டனை அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

முன்னதாக, அண்ணா ஹஜரா குழுவின் அரவிந்த் கேஜரிவாலை, நிலுவைத் தொகை 9 லட்ச ரூபாய் செலுத்துமாறு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியதும், அதை மறுத்த கேஜரிவால் மத்திய அரசை குற்றம்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment