Friday, 2 September 2011

ஷங்கருக்கு ஷாக் கொடுத்த இலியானா!

a1

‘நண்பன்’ படத்தில் நடித்து வருகிறார் இலியானா. வெகு காலமாகவே தமிழ்நாட்டு எல்லையை தொடுவதும், பின் சம்பள விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டு எல்லையை தொடாமலே பதுங்குவதுமாக இருந்தது அவரது வருகை. எப்படியோ அரும்பாடு பட்டு அவரை ‘ நண்பன்’ படத்தில் நடிக்க அழைத்து வந்தது
a2
படத்தை தயாரிக்கும் ஜெமினி லேப் நிறுவனம். அதிகம் அலட்டிக் கொண்டால் பின்னாலேயே சென்று கொண்டிருப்பவரல்ல ஷங்கர். ஆனால் இந்த படத்தின் ஸ்டார் காஸ்ட்டிங் அத்தனையும் ஜெமினி லேப் நிறுவனத்தின் சிபாரிசின் பேரில் ஷங்கர் ஒப்புக் கொண்டதுதான். அப்படி வந்தவர்தான் இலியானாவும். வந்ததிலிருந்தே ஷங்கருக்கும் இவருக்கும் சரிவர அலைவரிசை இல்லாமல் போய்விட்டதாம். எப்படியோ படத்தை முடிப்போம் என்று ஷங்கரும் அட்ஜஸ்ட் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இலியானாவின் ஆட்டம் எல்லைமீறி போனது படம் முடியும் தருவாயில்தான் என்கிறார்கள் ‘நண்பன்’ யூனிட்டில். படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது. வந்தாலும், இயக்குனர் கேட்கும் விஷயங்களில் ஒத்துப் போவதில்லை என்று பல வேதனைகளாம். கடைசி நாள் வரை ஷாக் கொடுத்த இலியானாவுடன் இனி படமே வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டாராம் ஷங்கர். எப்படியோ, படத்தை முடித்து கடைசி நாள் சம்பிரதாயமான பூசணிக்காய் உடைப்பு வைபவத்தையும் முடித்துவிட்டார்கள். அப்பாடா நிம்மதி என்று சாய்ந்து உட்கார்ந்திருக்கும் ஷங்கருக்கு ஒரு ஸ்பெஷல் தகவல். ஆந்திராவில் அல்லு அர்ஜுன் படத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்த இலியானா, ஒரு கோடியே 75 லட்சம் சம்பளம் கேட்டாராம். அதிர்ந்து போயிருக்கிறார்கள் அந்த ஊரிலும். ஆமாம்.. இலியானாவுக்கு என்னாச்சு?
tamil leader

No comments:

Post a Comment