Sunday, 11 September 2011

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை.

எழுத்தாளர்: வணக்கம் தமிழ்
11/09/11   





மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு தடை விதித்து தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது, இந்த தீர்மானத்தை அமைச்சர் கே பி முனுசாமி கொண்டு வந்தார்.



 1993 ல் பாராளுமன்றம் கொண்டு  வந்த தடை சட்டத்தை நிறைவேற்றுவதற்கு 2 அல்லது  அதற்க்கு மேற்பட்ட மாநிலங்கள் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், இதை தமிழக சட்ட சபையில் ஏக மனதாக நிறைவேற்ற பட்டது வரவேற்கத்தக்கது.



சட்ட சபையில் தீர்மான தடை போட்டதுடன், மனிதர்களை இது போன்ற வேளைகளில் ஈடுபடுத்துவதற்கு வேலையில்லாமல் செய்வதற்கு, தமிழக அரசு சாக்கடை துப்புரவு பணிக்கும் தூர்வாரும் பணிக்கும் கருவிகள் வாங்க தமிழக முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக சட்ட சபையில் அறிவிக்கப்பட்டது.



இது சக தமிழனாக நம் அனைவராலும் போற்றபடவும், மிகவும் பாராட்டுதலுக்கும் உரிய ஒரு தீர்மானம் ஏனெனில் நாம் அனைவரும் பார்த்து சில நிமிடங்கள் இந்த துப்புரவு தொழிலாளர் சகோதரர்களின் நிலையை எண்ணி ஒரு நிமிடவாவது வருத்தபட்டிருப்போம், மேலும் அவர்கள் அனைவராலும் கண்ணியமாக பார்க்க படுகிறார்கள் என்றால் அதன் பதில் என்னவென்று உங்களுக்கே தெரியும்.


அவர்கள் தங்கள் உடல் நலத்தை பணயம் வைத்து கடுமையான துர்நாற்றமுடைய இந்த துப்புரவு பணியை மேற்கொள்வது அவர்களின் வறுமையின் பின் புலமாகவே ஒழிய வேறென்ன கூறமுடியும்?

மேலும் இவர்கள் ஒரு குறுப்பிட்ட பிற்படுத்த பட்ட சமுதாயத்தின் பின் புலத்தை கொண்டவர்களாக பெரும்பாலும் இருக்கிறார்கள், இந்த தீர்மானமானது  நம் தமிழ் சமுதாயத்தில் துப்புரவு தொழிலாளர்களின் உடல் நலத்தினை மேம்படுத்தும் செயல் மட்டுமன்றி அவர்களுக்கு ஒரு சமூக அங்கீகாரத்தையும், அவர்களின் மேல் கண்ணிய பார்வையும் உண்டாக்குமென்பதில் மாற்று கருத்து இருக்காது.






எனவே அதிமுக அரசு தமிழர்களின் மனமார்ந்த நன்றிகள்.இதனை அதிமுக தீவிரமான முறையில் முன் எடுக்குமெனில் தமிழகம் சமத்துவ சமுதாயத்தை நோக்கி செல்கிறதென்று நாம் மகிழ்ச்சி அடையலாம்.



நன்றிகள் மதிப்புற்குரிய செல்வி ஜெயலலிதா அவர்களே.




No comments:

Post a Comment