Sunday, 11 September 2011

வேற்றுமையில் ஒற்றுமை

லாகூர், செப்.10: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் வெகுவேகமாகப் பரவி வருவதால் இந்தியாவிலிருந்து மருந்து, மாத்திரைகளையும் மருத்துவ சாதனங்களையும் உடனடியாக வாங்குவது என்ற முடிவை அந்த மாநில முதலமைச்சர் ஷாபாஸ் ஷெரீப் எடுத்துள்ளார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது குறித்து ஆராய லாகூரில் வெள்ளிக்கிழமை அவசரக் கூட்டம் நடந்தது. முதலமைச்சர் ஷாபாஸ் ஷெரீப் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

பிரான்சிலிருந்து வாங்குவதற்கு மாதக்கணக்கில் ஆகும். இந்தியாவிலிருந்து குறைந்த விலையில், எவ்வளவு எண்ணிக்கையில் வேண்டுமானாலும் மருந்து, மாத்திரைகளைக் கொள்முதல் செய்ய முடியும் என்ற ஷெரீப், தேவைப்பட்டால் விமானம் மூலம்கூட வரவழைத்துக்கொள்ளலாம் என்றார்.
தினமணி

No comments:

Post a Comment