Monday, 12 September 2011

ஜாதிகள் இல்லையடி பாப்பா?

எழுத்தாளர்: வணக்கம் தமிழ்
12 .09 .11 

ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி சொல்லுதல் பாவம் ன்னு சொன்னவரு இப்ப இருந்தா பரமகுடியில் அவருக்கும் ரெண்டு அருவா வெட்டு கட்டாயம் கிடைத்திருக்கும் என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது.


ஜாதியோ, மதமோ அடுத்தவருக்கு தீங்கு வராமல் தலைமுறை கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் பின்பற்ற நமக்கு இருக்கும் சுதந்திரத்தின் வெளிப்பாடே. இந்த ஜாதிகளும், மதங்களும் இப்பொழுது உயிர் பறிக்கும் அரசியல் மற்றும் ரௌடிகளின் ஆயுதமாக இருக்கிறது.எந்த அரசியல் கட்சியாவது படித்தவனுக்கு தான், பண்பாளனுக்குத்தான் எங்கள் கட்சியில், தேர்தலில் இடம் என்று அறிவிக்கறதா? இல்லை அதற்க்கு நாம் அவர்களை மட்டுமே குறையும் கூற முடியாது!! 

ஏனென்றால் அரசியல் பெரும்பாலோருக்கு ஒரு வருமானம் தரக் கூடிய வழி, இதில் அவர்கள் ஆதாயம் தேட என்னென்ன வழி முறைகள் உள்ளன என்பதை தான் பார்க்கிறார்கள், ஏதோ ஒரு சிலர்தான் தங்கள் கொள்கைகளை விட்டு கொடுக்காமல் ஜாதி மதம் பாராமல் நல்ல பண்பாலருக்கோ, படித்த பண்பாலருக்கோ வாய்ப்பு அளிக்கிறார்கள், அப்படி அளிக்கும் பட்சத்தில் அல்லது படித்த பண்பாளர் சுயேட்சையாக தேர்தலில் நிற்கும் பட்சத்தில் எந்த வித அரசியல், ஜாதி, மத சார்ப்பின்மையோ இன்றி நாம் வாக்களிக்க தயாரா?

இல்லையெனில் நாமும் இந்த ஜாதி, மத நச்சு விதைகளை தூவ வழிவகை செய்கிறோம். நாம் நல்லவருக்கு மட்டும் ஒட்டு போடுவோம் அதற்க்கு ஜாதி மதம் தடையில்லை எனில் அரசியல் கட்சிகளும் தங்கள் வழிமுறைகளை மாற்றுவார்கள்.

எனக்கு தெரிந்த வரையில் கட்சி ஆரம்பிக்கும் போது காலில் விழுந்தவுடன், நம்ம சாதிக்காரண்டா, நம்ம மதத்த சேர்ந்தவண்டா நாளைக்கு நமக்கு ஒண்ணுன்னா உதவி செய்வான் என்கிற மனப்பான்மை ஒட்டு போடற பெரும்பான்மையானவர்களிடம் இருக்கிறது.  இந்த மனநிலையை விட்டு நாம் அனைவரும் மாற வேண்டும்.ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லைன்னு சொல்ற மக்கள் இன்னும் கிராமங்களிலும், நகரங்களிலும்  இருக்கிறார்கள். படித்த இளைஞர்கள் ஜாதி, மதங்களின் வரலாறுகளை முதலில் தெரிந்து கொண்டு அதனை பெற்றவர்களுக்கு எடுத்து சொல்லலாம் .

நாம் மதங்களாலும், ஜாதிகளாலும் பிரிக்கப்பட்டு சுலபமாக ஏமாற்ற படுகிறோம். பெரும்பாலான வெளிநாடுகளில் ஜாதி என்ற ஒரு பிரிவே இல்லை, இதெப்படி நம் தமிழகத்தில் வந்தது என்பதன் வரலாறுகளை நாம் அனைவரும் கட்டாயம் அறிய வேண்டும், அதை களையவும் முன் வரவேண்டும். இன்னும் uk  போன்ற சில நாடுகளில் தான் சார்ந்த மதங்களை கல்வி சான்றிதழ், அடையாள அட்டைகள் போன்றவைகளில் விருப்பமில்லையெனில் தெரியபடுத்த கூட தேவையில்லை.இந்திய அரசியல் சட்டமைப்பில் மாறுதல் தேவை என்பது என் கருத்து, அரசாங்க கசெட்டில் ஜாதி, மதம் தேவை இல்லையெனில், இதன் முக்கியத்துவம் கால போக்கில் குறையும் கட்டாயம் உண்டாகும்.

இதற்காக நாமெல்லாம் கலப்பு திருமணம்தான் பெற்றோர் எதிர்த்தாலும் செய்யவேண்டும் என்று கூறவில்லை. ஜாதி, மத  பெருமையை பேசி பாகுபாடு செய்கின்ற மக்களை அவர்கள் நம் உறவினராயினும் அல்லது அரசியல் தலைவர்களாயினும்  புறந்தள்ளவேண்டும் என்பதே என் கருத்து. மேலும் இவைகளுக்கு நாம் வாழ்வில் முக்கியத்துவம் கொடுக்க கூடாது என்ற கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும்.

நகரத்திற்கு 100 இளைஞர்கள் இவ்வாறு இருப்பின் பின் தானாகவே அரசியல் ஒரு சாக்கடை என்கிற எண்ணம் மாறும், தமிழகம் உலக அரங்கில் தலை நிமிரும் காலம் வெகு விரைவில் கூடி வரும் இல்லையெனில், இது போன்ற உயிர் பலிகளும், சேதாரங்களும் தவிர்க்க முடியவே முடியாது.

ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி சொல்லுதல் பாவம்.

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை

No comments:

Post a Comment