Sunday, 11 September 2011

பரமக்குடி கலவரம்

பரமக்குடி. செப்.11: இமானுவேல் சேகரன் நினைவுநாளையொட்டி ராமநாதபுரம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்ற ஜான்பாண்டியன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
 
இதனால் பரமக்குடி பகுதியில் கலவரம் ஏற்பட்டது.
 
ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்துசென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினர். எனினும் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.
 
இந்த நிலையில் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. போலீசாரை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
 
இந்த சம்பவத்தில் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் போலீஸ் வேன்களுக்கு தீவைக்கப்பட்டது.
 
இதையடுத்து கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவத்தால் பரமக்குடி பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












 

நன்றி தினமணி 

No comments:

Post a Comment