Friday, 9 September 2011

எங்கே மனிதம் செல்கிறது

எழுத்தாளர்: வணக்கம் தமிழ்
09:09:11குண்டு வெடிப்பில் சொந்தங்களை இழந்த மற்றும் காயப்பட்ட எம் சகோதர, சகோதரிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலுடன் இதை தொடங்குகின்றேன். குண்டு வெடிப்பு என்பதை கோழைகளின் செயலாகவே பார்க்கவேண்டும்,  ஏனெனில் இதில் நேரிடையாக பாதிக்கப்படுவது ஒன்றுமறியா அப்பாவி பொது மக்களே, ஏதோ ஒரு காரணம் கூறப்படுகிறது இந்த காட்டு மிராண்டி தனத்திற்கு, புனித போர், நாங்கள் பழிவாங்க பட்ட இனம் அல்லது பழிவாங்கப்படும் இனம் இன்னும் பல.
போர் என்பது இரண்டு சம பலம் வாய்ந்த நபர்களுடன் நடக்க வேண்டுமே ஒழிய, ஆயுதம் தரிக்காத அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்வதன் மூலம் அல்ல, இதன் வாயிலாக நீங்கள் தைரிய மற்ற கோழைகள் என்பதை நிரூபிக்கிறீர்கள், நீங்கள் பழிவாங்க பட்ட காரணத்தினால் இந்த உயிர் இழப்பென்றால், உயிர் இழந்த ஒன்றுமறியாத அப்பாவிகளின் உயிர்களுக்கு என்ன பதில்?நீ தைரியமானவன், உயிருக்கு அஞ்சாத வீரன் எனில் அரசாங்கத்துடன் உன்னால் இயன்ற ஜன நாயக வழியில் போர் புரி, அல்ல இந்திய அரசாங்கம் உன்னையோ, உன்னை சார்ந்தவர்களையோ பலி வாங்குகிறதென்றால் ஜன நாயக வழியில் உன் துயரத்தை எங்களுடன் பகிர்ந்து கொள், நாங்களும் தோல் கொடுக்கிறோம் ஒரு சக இந்தியனாக.


இதை புனித போர் என்று கூறினால் நீ உண்மையாக குரானை முழுமையாக படிக்கவில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை என்று தான் பொருள், ஏனெனில் குரான் கூறுவது, ஒரு அப்பாவியை கொல்வதும் நரகத்தை அடைவதற்கான ஒரு வழி முறையே, எனவே இந்த மாதிரி குண்டு வெடிப்பில் ஈடுபடும் காட்டுமிராண்டிகளுக்கு தண்டனை நரகமே.


பாவத்தை முன்னெடுப்பவர்களை தொடருபவர்களும் பாவத்தினை பங்கு போடுவதாகவே அறியபடுகின்றார்கள், எனவே இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என்ற எந்த பேதமும் இன்றி இந்தியனாக நாம் அனைவரும் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன், இதில் ஈடுபட்டவர்களுக்கு உடனடி தண்டனையை வழங்குமாறு வேண்டுகோள் விடுப்போம்.
எதற்கெடுத்தாலும் PJB யையோ அல்லது RSS யையோ குறை கூறும் சவுக்கு போன்றவர்களுக்கு, பாகிஸ்தானிலும் குண்டு மசூதிகளில் வெடிக்கின்றனவே அதற்கும் இவர்கள் தான் காரணமா? அமெரிக்காவிலும் 9/11 நினைவு நாளுக்கு குண்டு வெடிக்கும் என்று கடிதம் அனுப்பியதும், கசாபை அனுப்பியதும் PJB இல்ல RSS தானோ?? சவுக்குக்கு எனது கடும் கண்டனங்கள், இப்பொழுது இதை காட்டுமிராண்டித்தனம் என்று மதானி கூற வில்லை என்றால் மதானியின் தூக்கு தண்டணையை எப்படி அரசு பரிசீலிக்கும்? பாகிஸ்தானில் மதானியின் பயிற்சி பற்றி ஏன் எழுத தயக்கம்? அங்கு எப்படி தீவிரவாத பயிற்சி முகாம்கள் செயல்படுகின்றன போன்றவைகளை எழுதலாமே??


தீவிரவாதிகளுக்கெல்லாம் மதம் ஒரு கேடயமே தவிர அது உயிர் நாடி இல்லை, அப்படி இருப்பின் தொழுகையில் இருந்து வரும் அல்லது தொழுகும் பொது குண்டு வெடிப்பார்களா??இஸ்லாம் சகோதரர்களே இது போன்ற மிருகத்தனமான செயல்களுக்கு உங்கள் கண்டனங்களை கடுமையாக தெரிவியுங்கள், மற்ற மத சகோதரர்களே நீங்கள் அப்பாவிகளை மத வேறுபாடின்றி இந்தியர்களாக பாருங்கள் ஏனெனில் நாம் அனைவரின் முன்னோர்களும் வாழ்க்கை முறை வேறுபடினும் பின்பற்றியதும், அறியப்பட்டதும்  ஒரு மதத்தின் பேரால் மட்டுமே, வரலாறுகளை தேடவும்.


இந்த மதானி போன்றவர்களும் இதனை வக்கீலின் மூலமாகவாவது காட்டு மிராண்டித்தனம் என்று கூறுவதனை நாம் வரவேற்ப்போம், இதைத்தான் இந்தியர்கள் அனைவரும் எவ்வித மத பேதமும் இல்லாமல் செய்யவேண்டும், முஸ்லிம்கள் இதற்க்கு அதிக அளவில் ஒத்துழைக்க வேண்டும், உங்களையும் நாங்கள் சகோதரர்களாக பார்க்கிறோம், ஏனெனில் எந்த அப்பாவி முஸ்லிமும் இந்த காட்டு மிராண்டி தனத்திற்கு ஆதரவு தெரிவிக்கமாட்டீர்கள் என்பதை உங்கள் கடுமையான கண்டனங்கள் மூலம் இந்த உலகிற்கு தெரிவியுங்கள்.  


No comments:

Post a Comment