Saturday, 3 September 2011

ஊட்டி மலை ரயிலை நிறுத்த தென்னக ரயில்வே திட்டம்!

நீலகிரிமலைக்கு சுற்றுலா செல்லவேண்டும் என்றால் மேட்டுப்பளையத்திலிருந்து ரயில் மூலமாக குன்னூர் செல்வதையே பொதுமக்கள் பெரிதும் விரும்புவார்கள்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீராவி என்ஜின் மூலம் இயங்கி, பல்சக்கரங்களில் நகர்ந்து அடர்ந்த காடுகளுக்குள் சென்று பல மலை குகைப்பாதைகளின் வழியாக ஊர்ந்து செல்லும் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மலை ரயிலில் செல்வதைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள்.

குறிப்பாக இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கட்டாயம் இந்த மலை ரயிலில் தான் குன்னூருக்கு செல்கிறார்கள். முன்னர், நிலக்கரியால் எரியூட்டப்பட்ட தண்ணீர் கொதித்து அதன் மூலம் இந்த நீராவி என்ஜின் ரயில் இயங்கியது

மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு செல்லும் 23 கிலோ மீட்டர் தொலைவை மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கடக்கிறது. இந்த பர்ணஸ் எண்ணையால் ரயில் இயக்கப்படுவதால் சுற்று சூழல் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. தவிரவும் எஞ்ஜின் பழுதடைந்து அடிக்கடி வனப்பகுதிக்குள் நின்று கொண்டு ரயில் மறியல் செய்வதால் சுற்றுலா பயணிகளும், இந்த ரயிலை பழுது பார்க்கும் பொறியாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்

சரியாக திட்டமிடாமல் இந்த ரயில் இயக்கப்படுவதால், தொடர்ந்து சிக்கல்கள் ஏற்படுவதும் அதே நேரத்தில் வருடத்திற்கு ஐந்து கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்படுவதால் இனி இந்த ரயிலை இயக்க வேன்டாம் என்று தென்னக ரயில்வேயின் பொது மேலாளர், சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரம்பரிய யுனெஸ்கோ அந்தஸ்த்து கொண்ட மலை ரயிலை எப்படியாவது இயக்கவேண்டும் என்று தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கு குன்னூர், மீட்டுப்பளையம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.. 

nakkeeran

No comments:

Post a Comment